Skip to main content

உத்தரபிரதேச பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு... பள்ளிகளின் அவலநிலை...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

உத்தரபிரதேச மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அம்மாநிலத்தில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

uttarpradesh public exam results announced

 

 

வழக்கமாக உத்தரபிரதேச பள்ளிகளில் காப்பி அடிப்பது அதிகமாகி இருக்கும். இந்த ஆண்டு அது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது நடந்த பொது தேர்வில் மோசமாக வந்துள்ளன. 165 பள்ளிகளில் யாருமே தேர்ச்சி பெறாத நிலையில், 388 பள்ளிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில், புத்தகத்தை வைத்து காபி அடித்த காலங்களில் 100 சதவீத தேர்ச்சி அடைந்த கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த 13 பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், 10ம் வகுப்பை பொருத்தவரை 50 அரசு பள்ளிகள், 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 84 தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 12ம் வகுப்பை பொருத்தவரை 15 அரசுப் பள்ளிகளும், 58 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் பூஜ்ஜிய சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்