உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தனது மூன்றாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. 2019-2020 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் 4.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பை விட 12 சதவீதம் அதிகம் ஆகும். இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை இன மாணவர்கள் உதவித்தொகைக்காக 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதராஸா கல்வி திட்ட முன்னேற்றத்திற்க்காக 459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல அயோத்தியில் 200 கோடி செலவில் விமான நிலையமும், மருத்துவ துறைக்கு 1298 கோடியும், தூய்மை இந்தியா திட்டத்திற்கு 6000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடுகளை பாதுகாக்க மட்டும் சுமார் 450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மாடுகள் பாதுகாப்பிற்காக 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.