Published on 18/05/2023 | Edited on 18/05/2023

மத்திய அமைச்சர்களின் இலாகாக்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றம் செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண் ரிஜ்ஜு. கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போது மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சமீபகாலமாக நீதிபதிகளுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் பதவியேற்றுள்ளார். இந்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத்துறை அமைச்சராகியுள்ளார்.