Published on 02/05/2022 | Edited on 02/05/2022
![Union Home Minister Amit Shah urgently advised!](http://image.nakkheeran.in/cdn/farfuture/D1q2qUD6LpzuumH2qwnOsgGNbWDk337txoz91WA05o8/1651478491/sites/default/files/inline-images/amitsha434.jpg)
நிலக்கரி பற்றாக்குறைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிலக்கரி உற்பத்தி, கையிருப்பு, நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்கு விரைந்து கொண்டு செல்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, மின் உற்பத்திப் பாதிக்கப்பட்டு பல மாநிலங்களில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.