இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், மழைக்கால கூட்டத்தொடருக்கு முதல்நாள் (ஜூலை 18), அனைத்துக் கட்சி அவைத்தலைவர் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, அதே ஜூலை 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து, இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.