Skip to main content

ரயில் விபத்து; தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 பேரின் நிலை?

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

train accident; Status of 31 people from Tamil Nadu?

 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்டுள்ள விபத்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலர் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்கள் மோதிய இந்த விபத்தில் ஏழுக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் உள்ளே சிக்கி உள்ளனர். இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது.

 

தற்போதைய நிலவரப்படி 280 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பேர் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 127 பேர் பயணித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்தவர்களுக்கு அவர்கள் அளித்த செல்போன் எண்களை அடிப்படையாக வைத்து அவர்களைத் தொடர்பு கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை நோக்கி பயணம் செய்தவர்களில் 65 பேர் பாதுகாப்பாக இருப்பதாகப் பதிலளித்துள்ளார்கள். 14 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 17 பேர் ரயிலில் பயணம் செய்யவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்கள். 10 பேருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. 14 பேருடைய செல்போன்களுக்கு தொடர்பு கொள்ள இயலவில்லை. 7 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

 

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 127 பேரை தொடர்பு கொண்ட நிலையில் அதில் 96 பேர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மீதமுள்ளவர்கள் 31 பேரின் நிலை தொடர்ந்து தொடர்புகொள்ள முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒடிசாவில் இருந்து சென்னை வரவேண்டிய 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தென்னக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்