திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வையங்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இந்தியாவில் பல கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு தற்போது 6,000 வரையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 12,500 ஆக அதிகரித்துள்ளது. தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை 2,63,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் 15 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதால், தற்போது காவல்துறை அதிகாரிகள் பொது தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தான அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.