Skip to main content

துணை பிரதமர் கனவில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

நாடு முழுவதும் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சித் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைத்து மத்தியில் ஆட்சி அமைக்கலாம் என்ற முடிவில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மாநில கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவுக் கோரி வருகிறார். இந்நிலையில் இவரின் சந்திப்பை உத்தரப்பிரதேச மாநிலத்தில் முக்கிய கட்சிகளாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி , சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தவிர்த்துள்ளனர். இருப்பினும் சந்திரசேகர ராவ் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த நிலையில் நேற்று (13/05/2019) மாலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் சந்திரசேகர ராவ்.

 

 

KCR

 

 

இவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதில் மு.க.ஸ்டாலின் சந்திரசேகர ராவிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் படி கோரியதாகவும் , சந்திரசேகர ராவ் தான் துணை பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை ஸ்டாலினிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். அதே போல் நேற்றைய ஸ்டாலின் உடனான  சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார் சந்திரசேகர ராவ்.  தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஆதரவு யாருக்கோ அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள சந்திரசேகர ராவ் தொடர்ந்து மாநில கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும் முந்தைய மக்களவை தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் தலைமையிலான மூன்றாவது அணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்து அதில் படுதோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்