Skip to main content

கரையைக் கடந்த ‘மிக்ஜாம்’ புயல்

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Storm Migjam crossed the coast

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது.

 

நேற்று முற்பகல் சென்னையிலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த புயலானது தீவிரப் புயலாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2:30 மணி அளவில் சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த புயல், சென்னையை விட்டு விலகி 200 கிலோமீட்டர் தொலைவிற்குச் சென்றது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து புயல் விலகிச் சென்றதால் சென்னையில்  மழை வெகுவாகக் குறைந்தது.

 

இந்நிலையில் தெற்கு ஆந்திரா கடற்கரையை  ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் தீவிரப் புயலாகக் கரையைக் கடந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்