அயோத்தியில் நீண்டகாலமாக நிலவிவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சனையில் ஒருமித்த சுமூகமான தீர்வை காண்பதற்காக கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர்கள் குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
![ayodhya](http://image.nakkheeran.in/cdn/farfuture/GUXcCjECHuDk6bTRHTVbY_mkTVO2hl0B4q6aatDuEJ0/1564746783/sites/default/files/inline-images/ayodh.jpg)
இக்குழுவுக்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டார். மேலும் இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மத்தியஸ்த குழுவின் சார்பில் நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மத்தியஸ்த குழுவின் அந்த அறிக்கையில், அயோத்தி நில விவகாரத்தின் சமரச முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, வழக்கை வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து விரைவில் முடித்து வைக்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.