Skip to main content

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Sonia Gandhi letter to PM Modi

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்தப் போவதாக பல வருடங்களாகவே மத்திய பா.ஜ.க. அரசு சொல்லி வருகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

அதே நேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 5 அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிறப்புக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படுவது குறித்து எதிர்க்கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தப்படவில்லை எனவும், சிறப்புக்கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை, சீனா எல்லை விவகாரம், மத்திய மாநில அரசுகளின் உறவுகள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட 9 அம்சங்கள் குறித்து 18 ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்