Skip to main content

"நிலைமை வேகமாக மாறலாம்" - மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு எச்சரிக்கை!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

india

 

இந்தியாவில் கரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வரும் நிலையில், இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

 

இந்தநிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தற்போது இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை கரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருவதுபோல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்சுகளை ஏற்பாடு செய்யுமாறு அந்த கடிதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் இந்த மூன்றாவது அலையில் 5 முதல் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவையுள்ளது எனவும், ஆனால் இந்த சூழல் வேகமாக மாறலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

 

மேலும், "ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியு படுக்கைகளை தினசரி கண்காணிக்க வேண்டும். கரோனா பராமரிப்பு மைய படுக்கைகள் தேவைப்படும்போது ஆக்சிஜன் ஆதரவு படுக்கைகளாக மேம்படுத்தப்பட வேண்டும்" என அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மருத்துவ மற்றும் நர்சிங் மாணவர்களையும் கரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தலாம் என கூறியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்