கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வதற்கு அமித்ஷா தான் காரணம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணியாக உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அங்கு தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்கிஹோலி ஆகிய எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "கோடிக்கணக்கில் பணம் மற்றும் பதவிகளை தருவதாக ஆசை காட்டி, எம்எல்ஏக்களை அமித்ஷா ராஜினாமா செய்ய வைக்கிறார். ஆனால், ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி எப்போதும் வெற்றி பெறாது. அதுபோல ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இருவரும், பாஜகவில் சேர வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.