Published on 24/07/2020 | Edited on 24/07/2020

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு இன்று புதுச்சேரி சட்டசபையில் ஆளுநர் கிரண்பேடி உரையாற்றி இருந்த நிலையில், ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், திட்டமிட்டபடி புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருந்தால் “முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருப்பேன்” என ஆவேசமாக பேசினார்.
புதுச்சேரி அரசை முடக்கும் சதி நடந்தது, அதை எதிர்த்து போராடி வருகிறேன். மத்தியில் மாற்று அரசு இருந்தாலும் பல துறைகளில் புதுச்சேரி அரசு விருதுகளை பெற்றுள்ளது எனவும் பேசினார்.