மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த இரண்டு சுயேட்சைகள் தற்போது பின்வாங்கியிருப்பதால், மீண்டும் கர்நாடக அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான நிலையில், குருகிராமுக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யாது என்று எடியூரப்பா தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சியை பாஜக கவிழ்த்து விடுமோ என காங்கிரஸ் - மஜத கவலைப்பட தேவையில்லை. கர்நாடகாவில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வரவழைத்துள்ளதாக பேட்டியளித்துள்ளார்.
இந்நிலையில், ‘அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக உள்ளனர். இன்று அவர்கள் அனைவரும் கர்நாடகாவுக்கு திரும்பிவிடுவார்கள். கர்நாடகாவின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதையுமே செய்யப்போவதில்லை, 20 முதல் 25 எம் எல் ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகிவிடுவார்கள். முதலமைச்சர் பதவி போனதிலிருந்து சித்தராமையாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அதனால்தான் பி.எஸ். எடியூரப்பாவை குறி வைக்கிறார்’ என்று பாஜகவை சேர்ந்த கே.எஸ். ஈஷ்வரப்பா.