Skip to main content

மாதம் நான்குமுறைக்கு மேல் பணமெடுத்தால் ஜி.எஸ்.டியுடன் கட்டணம் - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

state bank of india

 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, புதிய சேவை கட்டணங்கள் அமலுக்கு வரவுள்ளது. இவை ஏ.டி.எம்மில் பணமெடுப்பவர்களுக்கும், செக் புத்தகம் பயன்படுத்துபவர்களுக்குமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்கள், ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஏ.டி.எம்களிலும், வங்கிக்கிளைகளிலும் 4 முறை மட்டுமே இலவசமாக பணமெடுக்கலாம். அதற்கு மேல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை பணமெடுக்கும்போதும், 15 ரூபாயும் அதனுடன் சேர்த்து ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

அதேபோல் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பை வைத்திருப்பவர்கள் ஒரு நிதியாண்டில் 10 செக் தாள்களை கொண்ட புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.  அதன்பிறகு 10  தாள்களை கொண்ட  செக் புத்தகம் பெற 40 ரூபாயும் அதனுடன் சேர்த்து ஜி.எஸ்.டியும் கட்டணமாக செலுத்த வேண்டும். 25 தாள்களை கொண்ட செக் புத்தகத்தை பெற 75 ரூபாயும் அதனுடன் சேர்த்து ஜி.எஸ்.டியும் செலுத்த வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்