
சிதம்பரம் அருகே துணிச்சரமேடு கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கஞ்சா போதையில் பணம் இல்லாமல் பெட்ரோல் போடக் கூறியுள்ளனர். இதற்கு பணியில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சாதிக் மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாதிக்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. சாதிக், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில் துணிச்சரமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் சுந்தர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு அவர்கள் கடலூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் ரவுடிகள் சுற்றி வந்து லாரி ஓட்டுநர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விவசாயிகள் இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் உள்ளவர்களை தாக்கும் சம்பவம் கடந்த சில நாட்களாக தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.