
திருடியதாகக் கூறி பெண்ணையும், அவரது மகளையும் இரண்டு ஆண்கள் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரட் பகுதியில் காய்கறி சந்தை ஒன்று உள்ளது. இந்த சந்தையில் இருந்து காய்கறிகளைத் திருடியதாகக் கூறி ஒரு பெண்ணையும், அவரது மகளையும் இரண்டு நபர்கள் சாலையில் வைத்து தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்தனர். மேலும், அவர்களை தடியைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி அவர்களின் வயிற்றில் எட்டி உதைத்து கொடூரமாகத் தாக்கினர். பொதுவெளியில் நடந்த இந்த சம்பவத்தில், சுற்றி இருந்த எந்த நபர்களும் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. பெண்ணையும் அவரது மகளையும் சாலையில் வைத்து தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து இந்த சம்பவத்தை அறிந்த சூரட் போலீசார், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு நபர்களை கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டு அது தொடர்பான வீடியோ காட்சிகளை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சூரட் போலீஸ் பதிவிட்டது.