Published on 02/11/2018 | Edited on 02/11/2018

பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பு சஹாரா நிறுவனத்திடம் ரூ. 14,000 கோடியை 15% வரியுடன் திரிப்பி அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998 முதல் 2009ம் ஆண்டு வரை சஹாரா நிறுவனம் 3 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு பங்கு பத்திரம் மூலம் ரூ.14000 கோடி திரட்டியது. தற்போது இந்த பணத்தை ஆண்டுக்கு 15% வட்டியுடன் அளிக்க வேண்டும் என்றும் வங்கி வரைவு காசோலை மூலமாக இந்த பணத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இந்த பணத்தை திருப்பி அளிக்கும் வரை சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரத்தா ராய் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் வேறு எந்த நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கவும் செபி தடை விதித்துள்ளது.