Skip to main content

மனைவியுடனான சண்டையில் தலையிட்ட தாய்; மகனின் கொடூரச் செயல்!

Published on 07/03/2025 | Edited on 07/03/2025

 

 Son commits cruel act for Mother intervenes in fight with wife in uttar pradesh

உத்தரப் பிரதேசம் மாநிலம், கன்பத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நைனா தேவி (60). இவருடைய மகன் வினோத் குமார். வினோத் குமாருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். மது பழக்கத்திற்கு அடிமையான வினோத் குமார், மதுபோதையில் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில், வழக்கம் போல் மதுபோதையில் இருந்த வினோத் குமார் தனது மனைவியிடம் தகராறு செய்து அடித்துள்ளார். அப்போது நைனா தேவி, தலையிட்டு அந்த சண்டையை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வினோத் குமார், தனது தாய் நைனா தேவியை ஈட்டியால் குத்தி கொடூரமாகக் குத்தினார். இதில் படுகாயமடைந்த நைனா தேவி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வினோத் குமாரை பிடித்து கைது செய்தனர். மேலும், நைனா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்