சபரிமலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு பெண் பக்தர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று வந்திருக்கின்றனர். ஆனாலும், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலைக்கு வரும் குறிப்பிட்ட வயது பெண்கள் இருந்தால் அவர்கள் வரும் வாகனங்களை நிலக்கல் பத்தினம்திட்ட ஆகிய ஊர்களிலேயே தாக்குகின்றனர். ஆயிரக்கணக்கான போலிஸ் பாதுகாப்பு இருந்தும் காலையில் இருந்து பல பெண் பக்தர்கள், பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இது கலவரமாக வெடித்துள்ளது. சபரிமலைக்கு வரும் பெண்களை தடுக்கும் அமைப்புகளை போலிஸார் தடியடி நடத்தி சமாளிப்பதால். அங்கு போலிஸாருக்கும் போராட்ட அமைப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் காயமடைந்துள்ளனர். காலயைவிட மேலும் ஆயிரக்கணக்கான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.