அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வது சம்மந்தமான சீராய்வு மனு 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியதால், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேரளா அரசு நடைமுறைப்படுத்துமா? என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடத்திலும் எழும்பியது.
இந்த நிலையில் இன்று (15/11/2019) மாலை கேரளா ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரளா தேவசம் போர்டு மந்திாி கடகம்பள்ளி சுரேந்திரன் உச்சநீதிமன்றம், கடந்த 2018 செப்டம்பர் 28- ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபாிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு 7 போ் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியிருப்பதால், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்று 3 நீதிபதிகள் மட்டும் கூறிய கருத்து உச்சநீதிமன்றத்தின் முழுமையான கருத்தாக அது இல்லை.
அதே வேளையில் இன்று (15/11/2019) நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், இந்த மண்டல மகர கால பூஜைகளில் சபரிமலைக்கு செல்ல விரும்பும் 10 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்களை போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்காது என்றும், அதே வேளையில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெற்று வந்தால், பாதுகாப்புடன் அழைத்து செல்ல அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
கேரளா அரசின் இந்த திடீா் நிலைபாட்டுக்கு காரணம் பாரளுமன்ற தோ்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் படுதோல்வி கொடுத்த பாடம் தான் என்று எதிா்கட்சி தலைவா் காங்கிரஸ் ரமேஷ்சென்னிதலா கூறியிருப்பதோடு காங்கிரசின் நிலைப்பாடு்ம் அந்த குறிப்பிட்ட வயது கொண்ட பெண்களை சபாிமலைக்கு அனுமதிக்க கூடாது என்று தான் என்றார்.