ஒரு காலத்தில் சமுதாயத்தில் புண்படும் வார்த்தைகளால் ஒடுக்கப்பட்டுவந்த மாற்று பாலினத்தவர்கள் தற்போது திருநங்கைகள் என மாற்று பரிமாணம் பெற்றதுடன் பல சாதனைகளையும் படைத்தது வருகின்றனர். இந்நிலையில் கேரள அரசு மாற்று பாலின அறுவை சிகிச்சை செய்யும் திருநங்கைகளுக்கு 2 லட்சம் அரசு நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல பாராட்டுகளை பெற்றுவருகிறது.
இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் அரசு சார்பான பேஸ்புக் பக்கத்தில் வெள்ளியிட்டுள்ள பதிவில் இந்த திட்டம் சமூக நீதித்துறை மூலம் இந்த செயல்படுத்தப்படும். அதேபோல் திருநங்கைகளின் சமுதாய உயர்வுக்கும், அவர்களது பொருளாதார உயர்வுக்கும் பல திட்டங்கள் மூலம் கேரள அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் அனைத்து பாட பிரிவுகளிலும் திருங்கைகளுக்கு இரண்டு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.