கர்நாடகாவில் விஜயபுரா என்கிற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாப்பிள்ளைக்கு மணமகள் தாலி காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை மக்கள் ஆச்சர்யமாக பார்த்திருந்தாலும் கூட, இது அசாதாரணமான ஒன்றும் இல்லை. எங்கள் குடும்பத்தில் இவ்வாறு பல திருமணங்கள் நடைபெற்றுள்ளன என அவர்களுடைய குடும்பத்தினர் கூலாக பதில் கொடுத்தனர்.
இந்த திருமணமானது அங்குள்ள ஒரு மண்டபத்தில் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியான பசவன்னா சிலைக்கு அருகே நடைபெற்றது. மணமகன்கள் தாலி கட்டி முடிந்த பின்னர், மணமகள் மாப்பிள்ளைக்கு தாலி காட்டுவார்கள். ஆண், பெண் இருவரும் சமம் என்பதை இது காட்டுவதாக அவர்கள் கூறியிருந்தார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை இணையதளவாசிகள் சிலர் விமர்சித்தாலும், இது பண்பாடா? புரட்சியா? என பெரும் குழப்பமடைந்துள்ளனர். இதே போன்றதொரு திருமணம் தற்போது சுவீடன் நாட்டில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான செய்திகள் அந்நாட்டு ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.