கேரள தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் நாயர், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் நாயர், சிஆர்பிசி 164 சட்டப்பிரிவின் கீழ் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பதாக கூறி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்று என்ஐஏ அதிகாரிகள் அதனை நீதிபதிகள் முன் சமர்ப்பிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் நாயர் அப்ரூவராக மாறியிருப்பது இந்த வழக்கில் பல்வேறு புதிய விஷயங்களை வெளிக்கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.