
தேசிய நெடுஞ்சசாலைகளில் சுங்ககட்டணம் வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய முடியாது. நல்ல சேவை வேண்டும் என்றால் பணம் செலுத்திதான் ஆகவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகள் தனியாரிடம் உள்ள நிலையில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி கோடிக்கணக்கில் சுங்ககட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நாடு முழுவதும் இந்த சாலை சுங்ககட்டணத்தை ரத்து செய்யக்கோரி பலர் போராடிவருகின்றனர்.
குறிப்பாக மகாராஷ்டிராவை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் மும்பையில் ஒரு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், தேசிய நெடுஞ்சசாலைகளில் சுங்கச்சாவடிகளின் மூலம் சுங்ககட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யமுடியாது. தரமான சாலை வசதிகளை பயன்படுத்த வேண்டும் எனில் இதுபோன்ற சுங்கக்கட்டணங்களை மக்கள் செலுத்திதான் ஆகவேண்டும் எனக்கூறியுள்ளார்.