குடியரசுத்தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் (Rashtrapati Bhavan )பணியாற்றும் நிஷாந்த் யாதவ் என்ற ஊழியரால் டெல்லி பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த M.Sc பயிலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக டெல்லி வடக்கு அவென்யூ காவல் துறை முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்தது. இதில் ராஷ்டிரபதி பவன் ஊழியரான நிஷாந்த் யாதவ் என்பவர் ராஷ்டிரபதி பவன் ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் செவ்வாய் கிழமை (09/04/2019) அன்று கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் ராஷ்டிரபதி பவனில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தொடர்ந்து வரும் நிலையில் டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பணியாற்றும் ஊழியரால் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டார் என்ற செய்தி நாடு முழுவதும் பெண்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத்தலைவர் வசிக்கும் பகுதியிலேயே ஊழியரின் பாலியல் அத்துமீறல் அரங்கேறியிருப்பது இந்தியாவில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கு கேள்வி குறியை ஏற்படுத்துக்கிறது.
அதே போல் தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் எப்போதும் தீவிர கண்காணிப்பில் உள்ள டெல்லியில் இத்தகைய சம்பவம் அரங்கேறி இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா விரைவில் இணையும் என்றால் எவராலும் மறுக்க முடியாது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பெண்கள் அமைப்பினர் , பத்திரிக்கையாளர்கள் , சமூக ஆர்வலர்கள் , பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.சந்தோஷ் , சேலம் .