உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது.
மராட்டியத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்திலும் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் கரோனா பாதிப்பு கணிசமான அளவில் இருந்தாலும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.