
செல்போனை பறிமுதல் செய்ததால் ஆசிரியையை, மாணவி ஒருவர் தனது காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விஷியநகரம் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியில் செல்போன் வைத்திருந்ததாகக் கூறி, கல்லூரி ஆசிரியை அந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளார். இதனால் மாணவி, அந்த ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவி, தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி, ‘எனது செல்போனை கொடுக்க முடியுமா? இல்ல என்னுடைய செருப்பால் உன்னை அடிக்கட்டுமா? என்று ஆசிரியைக்கு மிரட்டல் கொடுத்துள்ளார். ஆனால் செல்போனை திருப்பி கொடுப்பதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்ததால், மாணவி தன்னுடைய செருப்பை வைத்து ஆசிரியையை கடுமையாக தாக்கினார். அதன் பிறகு, அங்கு கூடியிருந்தவர்கள் உடனடியாக அவர்களை பிரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.