Skip to main content

ரூ.5 கோடி கொடுத்து தூண்டப்பட்ட கலவரம்! - விசாரணைக்குழு அறிக்கை

Published on 07/09/2017 | Edited on 07/09/2017
ரூ.5 கோடி கொடுத்து தூண்டப்பட்ட கலவரம்! - விசாரணைக்குழு அறிக்கை

குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின் நடந்த கலவரம் தூண்டப்பட்டது என்றும், இதற்காக தேரா சச்சா சவுதா அமைப்பின் சார்பில் ரூ.5 கோடி செலவழிக்கப்பட்டதாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், தனது பக்தைகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹரியானாவின் பன்ச்குலா நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஹரியனாவின் முக்கிய நகரங்கள், பஞ்சாப் என பல இடங்களில் கலவரங்கள் கிளம்பின. இதில் 30க்கும் மேற்பட்டனர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் குறித்தான தகவல்களை சேகரிக்க விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணைக் குழு இன்று அதன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், ஹரியானாவில் கலவரம் தூண்டப்பட்டதாகவும், இதற்காக தேரா சச்சா சவுதா அமைப்பு ரூ.5 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து பெற்று, கலவரத்திற்காக செலவு செய்தவர் சம்குர் சிங். இவர் தேரா சச்சா அமைப்பின் பன்ச்குலா கிளையின் நிர்வாக இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்குர் தான் பெற்ற பணத்தை நகரின் முக்கிய பகுதிகளில் செலவிட பயன்படுத்தியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் நிவாரணம் தரப்படும் என அறிவித்ததாகவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சம்குர் சிங் ஆகஸ்ட் 28ஆம் தேதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாகவும், அவர் பிடிபடும் பட்சத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்