ரயிலில் பாய்ந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத் நகரையே உலுக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சித்திப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி (19). இவர், தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், பார்கவி தனது காதலனுடன் செல்போனில் மெசேஜ் செய்வதை பார்கவின் சகோதரி கண்டுபிடித்துள்ளார். இதனால், பார்கவிக்கு பயமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
பெற்றோருக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று பயந்த பார்கவி, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி, ஜமாய் உஸ்மானியா ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரயிலின் அடியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர், பார்கவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.