ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. அந்த பெண் தனது முதல் கணவரை விட்டு கூலித் தொழிலாளியான ஜித்து என்பவருடன் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த குழந்தை தொடர்ந்து அழுததாகக் கூறப்படுகிறது. குழந்தை அழுது தனது தூக்கத்தை கெடுப்பதாக நினைத்த ஜித்து, அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அடுத்த நாள் காலை, குழந்தை எழுந்திருக்காததால், தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜித்து தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக தாய் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்றுள்ள ஜித்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.