உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவ சோதனைகளை தாண்டி அவர்களது ஜாதகத்தை பார்த்து சிகிச்சை கொடுக்கும் வினோதம் ராஜஸ்தானில் நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள யுனிக் சங்கீதா நினைவு மருத்துவமனையில் தான் இவ்வாறு நடந்து வருகிறது. இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறும் போது, ஒரு நாளுக்கு 25 முதல் 30 நோயாளிகள் வருகின்றனர். அத்தனை பேரின் ஜாதகத்தையும் பார்த்து அதன் மூலம் அவர்களுக்கு உள்ள நோய் கண்டறியப்படுவதாகவும், அதன் பின்னர் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் ஜோதிடத்தோடு சேர்த்து மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டு இரண்டையும் ஒப்பிட்டு பார்த்த பின் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இப்படி ஜாதகம் பார்த்து சிகிச்சை கொடுப்பது நோயாளிகளுக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொழிநுட்பங்கள் நிறைந்த இந்த காலத்திலும் மக்களும், மருத்துவர்களும் இப்படி செய்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.