அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மாணசேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே, "இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த போராட்டத்தில் கரசேவகர்கள் செய்த தியாகம் வீணாகவில்லை. விரைவாக ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். ராமர் கோயிலுடன், தேசத்திலும் ‘ராம ராஜ்யம்’ இருக்க வேண்டும், அதுவே எனது விருப்பம்" என தெரிவித்தார்.