வரும் ஜூன் 20ஆம் தேதி வீடியோ மூலமாக நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி தனது அரசு அறிமுகம் செய்துள்ள திட்டங்கள், அதன் வழியான செயல்பாடுகள் குறித்து நேரடியாக பயனாளிகளான பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். அதன்படி, 4 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் குறித்து, நாடு முழுவதிலும் உள்ள பெண்களிடம் பிரதமர் மோடி சமீபத்தில் உரையாடினார். இன்று காலை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் குறித்து பயனாளிகளுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை எளிமையாக்குவது குறித்து பேசினார்.
அந்த உரையாடல் நிறைவடைந்த நிலையில், வருகிற ஜூன் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விவசாயிகளுடன் நேரடியாக உரை நிகழ்த்த இருக்கிறேன். இதற்காக நாடு முழுவதிலும் உள்ள 3 லட்சம் பொதுசேவை மையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த உரையாடலின் போது விவசாயத்துறையில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தோசை சுட்டுத் தருவீர்களா என மோடி கேட்டது குறிப்பிடத்தக்கது.