நேற்று கூடிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் மக்களவை உறுப்பினர்கள் பதவி பிராமணம் எடுத்துக்கொண்டனர். பிரதமர் மோடி உட்பட பலரும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் அவர்களின் பிராந்திய மொழிகளையே பிரமாணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். காலை மக்களவை கூட்டத்திற்கு அவர் வராத நிலையில், மதியத்திற்கு மேல் அவர் அவை கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் வயநாடு தொகுதி எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எம்.பி.,யாக பதவியேற்பவர்கள் அதன் பிறகு அதற்கான அவை குறிப்பேட்டில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து போட மறந்த ராகுல் காந்தி அங்கிருந்து வெளியேற கிளம்பினார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுலை நிறுத்தி கையெழுத்திட வேண்டும் என்பதை ராகுலுக்கு நினைவூட்டினார். இதையடுத்து, ராகுல் காந்தி திரும்பி வந்து கையெழுத்திட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.