Published on 21/12/2019 | Edited on 21/12/2019
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரியில் ஆட்சியே போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம். தமிழகத்தில் சிறுபான்மையினரை பழிவாங்கும் நோக்கில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.