Published on 01/10/2018 | Edited on 01/10/2018
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டட்த்தைச் சேர்ந்த எழுமையான் பக்தர்கள், திருப்பதிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தங்களின் பாத யாத்திரையை தொடங்கியுள்ளனர். இவர்கள் புதுச்சேரி அருகே உள்ள திருக்கனையூரையடுத்த குச்சிபாளையம் அருகே வரும்போது, அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று அவர்கள் பின்னே சென்றுள்ளது. பக்தர்கள் அந்த நாயை துறத்தியும் அது செல்லாமல் அவர்களுடனே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பக்தர்கள் அந்த நாயையும் தங்கள் பாதை யாத்திரையில் இணைத்து கொண்டனர். அந்த நாயுக்கு மஞ்சள் துண்டு ஒன்றை கட்டி, பக்தியுடன் 400 கிமீ திருப்பதிக்கு அழைத்து சென்றுள்ளனர். நாயும் அவர்களுடனே பாத யாத்திரைக்கு வந்ததால், அதை ஊர் திரும்பும்போது தங்களுடனே அழைத்து செல்ல திட்டமிட்டுளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.