ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி வகை சிறிய ராக்கெட் இரண்டு செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்ற நிலையில், செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி வகை சிறிய ராக்கெட் ஏவப்பட்டது. இதில், EOS 2 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளும், ஆசாதி-சாட் என்ற செயற்கைக்கோளும் அனுப்பட்டன. ஆசாதி-சாட் செயற்கைக்கோளானது நாடு முழுவதும் 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கியதாகும்.
இந்த நிலையில், விண்ணில் ஏவப்பட்ட இந்த இரு செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தற்போது கிடைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாக வைத்து செயற்கைக்கோள்களின் நிலையை அறிய முயற்சிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.