Published on 12/12/2018 | Edited on 12/12/2018
தெலுங்கானா, மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணியும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மாநில வாரியாக கட்சிகளின் வெற்றி விவரங்கள் பின்வருமாறு
மத்திய பிரதேசம்:
காங்கிரஸ்- 114, பா.ஜ.க- 109, மற்றவை- 7.
ராஜஸ்தான்:
காங்கிரஸ்- 99, பா.ஜ.க- 73, மற்றவை- 27.
மிசோரம்:
மி.தே.மு- 26, காங்கிரஸ்- 5, பா.ஜ.க- 1, மற்றவை- 8.
தெலுங்கானா:
டி.ஆர்.எஸ்- 88, காங்கிரஸ்- 19, பா.ஜ.க- 1, மற்றவை- 11.
சத்தீஸ்கர்:
காங்கிரஸ்- 68, பா.ஜ.க- 15, மற்றவை- 7.