துபாய் விமானநிலையத்தில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பயணிகளின் பையில் இருந்து இரண்டு மாம்பழங்களை எடுத்து தின்றதாக பதியப்பட்ட வழக்கில் வரும் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ஒருவர், துபாய் விமானநிலையத்தில் மூன்றாவது முனையத்தில் பணியாற்றி வந்துள்ளார். பயணிகளின் பைகளை கன்வேயர் பெல்ட்டில் எடுத்துவைக்கும் பணியில் இருந்த அவர், ஒரு முறை தாகம் காரணமாக பயணி ஒருவர் பையில் இருந்த இரண்டு மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்து இவர் மாம்பழம் சாப்பிட்டதை உறுதி செய்த காவல்துறை, 2019 ல் வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் விசாரணை முடிவடைந்து வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய நபருக்கு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.