Skip to main content

ஆக்சிஜன் கையிருப்பு - ஆய்வு கூட்டம் நடத்திய மத்திய அமைச்சர்!

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

piyush goyal

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை கடுமையாக அதிகரித்திருந்தது. டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுபாடும் ஏற்பட்டது. முதல் அலையில் அதிகபட்சமாக ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 3095 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 9,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தசூழலில், தற்போது மீண்டும் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில் மத்திய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், மருத்துவ ஆக்சிஜன் தயார் நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவ ஆக்சிஜன் தயார்நிலை தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த, போதுமான மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பயனுள்ள வழிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Chief Minister M.K. Stalin Union Minister praises 

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இதையடுத்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருத்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், “கலாச்சாரம், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநரான நிஹர் ஷாஜிக்கு எழுந்து நின்று பாராட்டுவோம்.‘மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கடும் சவால்களை எதிர்கொண்டோம். பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டினால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை வைத்து செயல்படும் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 07/01/2024 | Edited on 07/01/2024
Chief Minister M.K. inaugurated the World Investors Conference. Stalin

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் (07-01-24) மற்றும் நாளையும் (08-01-24) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் தொழில் கருந்தரங்குகள், வணிக ஈடுபாடுகள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன.