Skip to main content

2 குழந்தைகளைக் கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு!

Published on 26/12/2024 | Edited on 26/12/2024
The tragic decision made by the mother who hit her 2 children

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திப்பம்மா(38). இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும், 4 வயது ஆண் குழந்தை ஒன்றும் இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தனது வீட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு திப்பம்மா கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தானும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், வெளியே சென்ற கணவர் வீட்டிற்கு வந்த போது மனைவியும், குழந்தைகளும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து திப்பம்மாவின் கணவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த திப்பம்மா மற்றும் அவரது 2 குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்