உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று, தாஜ்மஹால். இந்தநிலையில் தாஜ்மஹால் குத்தகைக்கு விடப்பட இருப்பதாகக் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக பரவி வரும் செய்தியில், தாஜ்மஹால் உள்ளிட்ட 100 பாரம்பரிய இடங்களை, தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, 25 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதற்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பின. காங்கிரஸ் கட்சியும் இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சித்தது. இந்தநிலையில் சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை ஊடகங்களுக்கு அளிக்கும் இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம், “பாரம்பரிய தளங்களைக் குத்தகைக்கு விட்டு, அதன்மூலம் நீதி திரட்டும் எந்த முடிவையும் மத்தியக் கலாச்சார அமைச்சகம் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளது.