ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரும், பாரதிய ஜன சங்கத்தின் முன்னாள் தலைவருமான பரமேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக கொச்சியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இவரது சொந்த ஊரான சேர்தலா அருகில் உள்ள முகம்மாவில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. இவரது மறைவிற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரதமாதாவின் பெருமைக்குரிய, அர்ப்பணிப்பு மிக்க மகன் பி. பரமேஸ்வரன். இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மறுமலர்ச்சிக்கும், ஏழைகளின் முன்னேற்றத்துக்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பரமேஸ்வரன். பரமேஸ்வரின் தத்துவங்கள், சிந்தனைகள், எழுத்துகள் அற்புதமானவை" என பதிவிட்டு தனது இரங்களைத் தெரிவித்துள்ளார்.
Shri P Parameswaran was a proud and dedicated son of Bharat Mata. His was a life devoted to India’s cultural awakening, spiritual regeneration and serving the poorest of the poor. Parameswaran Ji’s thoughts were prolific and his writings were outstanding. He was indomitable!
— Narendra Modi (@narendramodi) February 9, 2020