புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டையில் இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
![pakistan statement about modi speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/HuW_X0JATdeKIKwt9tEvsYZVbryqgb_0qpjAlL6UliQ/1556014899/sites/default/files/inline-images/narendra-modi_pti-std_2.jpg)
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இது குறித்து பேசிய மோடி, "இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தானிடம் பிடிபட்டபோது, அவரை மீட்க, பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக, அமெரிக்க மூத்த அதிகாரி பாகிஸ்தானிடம் தெரிவித்தார். எனவே அபிநந்தன் உடனடியாக மீட்கப்பட்டார்” என மோடி பேசினார். மோடியின் இந்த பேச்சு குறித்து அறிக்கை ஒன்றை விட்டுள்ள பாக்கிஸ்தான், அந்த அறிக்கையில், "இது சற்றும் எதிர்பாராதது. அரசியல் லாபத்துக்காக மோடி இப்படியெல்லாம் பொய் பேசுவது துரதிஷ்டவசமானது, இது ஒரு பொறுப்பற்ற செயல்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.