2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட 26 பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்கள். பாம்பு பிடிப்பதில் வல்லவர்களாக இருக்கும் இருவரும் உலக அளவில் பாம்பு பிடிக்க பயிற்சி அளித்து வருகின்றனர். அதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங்குக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலம் கல்யாண சுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.