Skip to main content

காலேஸ்வரம் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் முதல்வர் சந்திரசேகர ராவ்!

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூபாய் 80,500 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் காலேஸ்வரம் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா மற்றும் ஆந்திரா கூட்டு மாநில ஆளுநரான நரசிம்மன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மகாராஷ்ட்ராவில் உருவாகும் கோதாவரி நதி தெலுங்கானா வழியாக ஆந்திராவுக்கு சென்று கடலில் கலக்கிறது.

 

 

TELAGANA KALESHWARAM DAM

 

 

விவசாயிகளின் நீர் பாசனத்திற்காக மெடிகட்டா பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலேஸ்வரம் திட்டம் தெலுங்கானாவில் உள்ள 13 மாவட்டங்களில் 45 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர்பாசனம் செய்ய உதவும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே போல் ஹைதராபாத், செகந்திராபாத் குடிநீர் தேவைக்கும் இந்த திட்டம் பயன்படும். இந்த அணையை கட்டுமான துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான "மெகா இன்ஜினியரிங் லிமிடெட்" (MEGHA ENGINEERING AND INFRASTRUCTURE LIMITED) நிறுவனம் கட்டியுள்ளது. இந்த காலேஸ்வரம் அணை 16.37 டிஎம்சி கொள்ளளவு கொண்டது.

 

 

TELAGANA KALESHWARAM DAM

 

 

ஹைதராபாத் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தெலுங்கானா காலேஸ்வரம் அணையை பார்க்க குவிந்து வருகின்றன. இதனால் அம்மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு தொடங்கிய காலேஸ்வரம் அணை கட்டும் பணிகள் தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்