1809 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடு "லோக் ஆயுக்தா" மற்றும் "லோக்பால்" சட்டத்தை முதன் முதலில் அமல்படுத்தியது. இதன் மூலம் லஞ்சம் , ஊழல் செய்த அதிகாரிகள் அந்நாட்டின் இந்த அமைப்பால் தண்டிக்கப்பட்டனர். இதனை பல நாடுகளும் பின்பற்றி ஊழலுக்கு எதிரான இந்த சட்டத்தை இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
"லோக் ஆயுக்தா" அமைப்பு :
மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்,முதல்வர் உள்ளிட்டோர் மீது ஏதேனும் லஞ்சம் மற்றும் ஊழல் பொதுமக்கள் புகார் அளித்தால் பாரபட்சம் இல்லாமல் அவர்களை விசாரிக்கும் அதிகார அமைப்பு தான் "லோக் ஆயுக்தா". இது மாநிலத்தின் ஊழலுக்கு எதிரான அமைப்பு ஆகும்.
"லோக் ஆயுக்தா "அமைப்பின் தலைவர் இருக்க என்ன தகுதி வேண்டும் ?
பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி (அல்லது) ஓய்வு உயர்நீதிமன்ற நீதிபதி "லோக் ஆயுக்தா" அமைப்பின் தலைவராக இருக்க தகுதி உடையவர் ஆவர்.
இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு "ADMINISTRATIVE REFORMS COMMISSION " என்ற அமைப்பை உருவாக்கி அரசின் கீழ் உள்ள அதிகாரிகளை மாற்ற இக்குழு அமைக்கப்பட்டு நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டது. அப்போது தான் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் இயற்ற வேண்டும் என அறிக்கையை தாக்கல் செய்தது . மேலும் இக்குழுவில் மக்கள் கண்காணிப்பாளர்கள் எனவும் விசாரணை குழுவில் ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார் என அறிவித்தது. ஆனால் அதன் பிறகு மத்தியில் அமர்ந்தவர்கள் இக்குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டனர்.
இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் மத்தியில் லோக்பால் சட்டம் மற்றும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் கிரண் பேடி,தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இவர்களின் மூலம் தான் லோக் ஆயுக்தா சட்டம் மற்றும் லோக்பால் சட்டம் ஒன்று உள்ளது என்று மக்களுக்கு தெரியவந்தது. இந்தியாவில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 17 மாநிலங்களில் "லோக் ஆயுக்தா" அமைப்பு நடைமுறையில் உள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக "லோக் ஆயுக்தா " சட்டம் கொண்டு வந்த மாநிலம் "மகாராஷ்டிரா" ஆகும். இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாடு , மேகாலயா , மிசோரம் , டெல்லி , தெலங்கானா , ஜம்மு & காஷ்மீர் , பாண்டிச்சேரி , திரிபுரா , மேற்கு வங்காளம் , அருணாச்சல பிரசேதம் , நாகலாந்து , மணிப்பூர் உள்ளிட்ட 12 மாநிலங்கள் " லோக் ஆயுக்தா " அமைப்பை உருவாக்கவில்லை.
எனவே லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்காதா மாநில அரசுகள் உடனடியாக " லோக் ஆயுக்தா " அமைப்பை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் சமீபத்தில் உத்தரவிட்டதது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பல மாநிலங்கள் "லோக் ஆயுக்தா" சட்டம் இயற்ற தேவையான நடவடிக்களை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் "லோக் ஆயுக்தா" சட்டம் கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். இதனால் 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டபேரவையில் " லோக் ஆயுக்தா" சட்டம் நிறைவேற்றப்பட்டது . இருப்பினும் இந்த அமைப்பு முழு வடிவம் இதுவரை பெறவில்லை. மேலும் இந்த அமைப்பில் போலி புகார் அளிக்கும் மனுதாரருக்கு அதிகபட்ச தண்டனையாக ரூபாய் 1 லட்சம் மற்றும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. மேலும் போலி புகாரால் பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு நஷ்ட ஈடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.இன்றைய காலகட்டத்தில் இந்திய நாட்டிற்கு இது போன்ற சட்டங்கள் மக்களுக்கு அவசியம் ஆகும்.
" லோக் ஆயுக்தா " சட்டம் மற்றும் குழுவை பல மாநில அரசுகள் அமைத்த போதும் மத்தியில் " லோக் பால் " சட்டத்தை இதுவரை மத்திய அரசு உருவாக்கவில்லை. மத்தியில் " "லோக்பால் சட்டம்" கொண்டு வர கூடி கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் கூறியது 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தாங்கள் ஆட்சி அமைந்த உடனடியாக " லோக்பால் " அமைப்பு உருவாக்கப்படும் என என்னிடம் கூறினார்கள். ஆனால் ஐந்து ஆண்டுகள் முடியும் நிலையில் இதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என அண்ணா ஹசாரே கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு இச்சட்டம் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது ஆகும். லோக் ஆயுக்தா சட்டம் + லோக் பால் சட்டம் = " ஊழலை ஒழித்திடும் " மற்றும் " இந்தியா ஜொலித்திடும்"
பி . சந்தோஷ் , சேலம்