Skip to main content

தொகுதி விவசாயிகள் பிரச்சனை: சட்டமன்றத்தில் தற்கொலைக்கு முயன்ற பாஜக எம்.எல்.ஏ!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

bjp mla

 

விவசாயப் பிரச்சனைக்காக சட்டமன்ற உறுப்பினர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இந்தநிலையில் அம்மாநில சட்டமன்றத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் நேற்று (12.03.2021) தொடங்கியது. அவை தொடங்கியபோதே காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் நெல் கொள்முதல் தொடர்பான பிரச்சனையைக் கிளப்பினார்.

 

இதன்பிறகு ஒடிசாவின் உணவு விநியோகத்துறை அமைச்சர், நெல்கொள்முதல் சம்மந்தமாக அறிக்கையை வாசித்தார். அப்போது தியோகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுபாஷ் சந்திர பனிகிராஹி சானிடைசரைக் குடிக்க முயன்றார். அப்போது அருகிலிருந்த சக உறுப்பினர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே அவர் நெல்கொள்முதல் பிரச்சனை தொடர்பாக தற்கொலை செய்துகொள்வேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

சானிடைசரைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர், இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “எனது தொகுதியில் நெல்கொள்முதல் செய்யப்படவில்லை. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குவிண்டால் நெல் விற்கப்படாமல் உள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்.” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்